Friday, 31 May 2013
Thirupampuram Ragu-Ketu Abishegam
Parigarapoojai contact Dr. Ganapathi Krishnan Mobile. No. 9940397191
இராகு பகவானுக்கு நடைபெறும் அபிஷேகம்
அபிஷேக காட்சிகள்
Note:The following is the general அபிஷேக முறை as per literature for all gods
அபிஷேக
முறை:
நல்லெண்ணெய்,
மாப்பொடி, நெல்லிமுள்ளி, பஞ்சகவ்யம், பஞ்சாமிருதம், பால், தயிர், நெய்,
தேன் கரும்பின் சாறு, பழவர்க்கம், இளநீர்,
வாசனைச் சந்தனம் சிருங்கநீர், தாராநீர்,
ஸ்நபனநீர், சங்காபிஷேகம் ஆகியனவற்றை வரிசையாகச் செய்யவேண்டும். விபூதி, அன்னம், கும்பநீர்,
அர்க்கிய தீர்த்தம் இவற்றாலும் அபிஷேகம் செய்யவேண்டும்.
சகலாகம
சங்கிரகம் என்னும் நூலில் கீழ்க்கண்ட
முறை கூறப்பட்டுள்ளது:- 1. எண்ணெய், 2. பஞ்சகவ்யம், 3. மாவு, 4. நெல்லிமுள்ளி, 5. மஞ்சள் பொடி, 6. பஞ்சாமிருதம்,
7. பால், 8. தயிர், 9. நெய், 10. தேன், 11. கரும்பின் சாறு, 12. பழரசங்கள், 13, இளநீர், 14. அன்னம், 15. சந்தனம், 16. ஸ்நபனநீர்.
பலன்கள்:
நன்னீர்
ஆட்டினால் நம் விருப்பங்கள் இனிதே
நிறைவேறும்; வாசனைத் தைலம் சுகத்தை
அளிக்கும்; பஞ்சகவ்யம் பாவத்தைப் போக்கும்; பசுவின் பால், தயிர்,
நெய், நீர், சாணம் இவற்றால்
ஆவது பஞ்சகவ்யம்.
"ஆவினுக்கருங்கலம்
அரனஞ்சாடுதல்" - பசுவிற்குப் பெருமை, அதன் ஐந்து
பொருள்களை இறைவன் திருமஞ்சனத்திற்கு ஏற்றருள்கின்றான்.
மேலும், திருநாவுக்கரசர்,
"பாவ மும்பழி பற்றற
வேண்டுவீர்
ஆவில் அஞ்சுகந் தாடும்
அவன்கழல்
மேல ராய்மிக வும்மகிழ்ந்
துள்குமின்
காவ லாளன் கலந்தருள்
செய்யுமே"
என்று கூறுவதால் பஞ்சகவ்ய அபிஷேகத்தால் பாபம் போகுமென்பது திண்ணம்.
பஞ்சாமிருதம்
உடல் திடத்தை நல்கும். யம
பயத்தைப் போக்கும் என்பதை திருஞானசம்பந்தர்
"பாலினால் நறுநெய்யால் பழத்தினால் பயின்றாட்டி
நூலினால் மணமாலை கொணர்ந்தடியார் புரிந்தேத்தச்
சேலினார் வயல்புடைசூழ் செங்காட்டங் குடியதனுள்
காலினால் கூற்றுதைத்தான் கணபதீச் சரத்தானே" - என்று
திருவாய் மலருகின்றார்.
நெய் அபிஷேகம் செய்தால் மோட்சநிலை கிடைக்கும்; பால் நீடித்த ஆயுளையும்;
சத்வகுணத்தையும் தரும்.
"பாலை யாடுவர் பன்மறை
ஓதுவர்
சேலை யாடிய கண்ணுமை
பங்கனார்
வேலை யார்விட முண்டவெண்
காடர்க்கு
மாலை யாவது மாண்டவர்
அங்கமே"
என்னும்
திருநாவுக்கரசர் திருவாக்கில், தேவர்கள் ஆலால நஞ்சால் சாவு
நேரும் என அஞ்சியபோது அதனை
அமுது செய்து தேவர்களுக்கு நீண்ட
வாழ்வு தந்த வரலாறு பேசப்பெறுகின்றது.
அப்பெருமான் உகந்தது பாலாகும்.
தயிர்கொண்டு
அபிஷேகம் செய்வதால் நன்மக்களைப் பெறலாம். குழந்தைகள் பேரில்லாதவர்கள் தயிர் அபிஷேகம் செய்து
அக்குறையை நீக்கிக் கொள்ளலாம். மாப்பொடி கடன் தொல்லையை நீக்கி
நல்வாழ்வு நல்கும். நெல்லிமுள்ளி அபிஷேகம் உடலிலுள்ளா நோய்களைப் போக்கி நல்லுடம்பு தரும்.
கரும்புச் சாறு கொண்டு திருமஞ்சனம்
செய்யின் ஆரோக்கியம் அளிக்கும். தேன் சுகத்தைக் கொடுக்கும்.
"வான நாடனே வழித்துணை
மருந்தே
மாசி லாமணி யேமறைப்
பொருளே
ஏன மாஎயி றாமையும்
எலும்பும்
ஈடுதாங்கிய மார்புடை யானே
தேனெய் பால்தயிர் ஆட்டுகந்
தானே
தேவ னேதிரு வாவடு
துறையுள்
ஆனை யேஎனை அஞ்சல்என்
றருளாய்
ஆர்எ னக்குற வமரர்கள்
ஏறே"
-
சுந்தரர்.
பழங்களைக்
கொண்டு பஞ்சாமிர்தம் செய்து அபிஷேகம் செய்யின்
செல்வப் பெருக்கு உண்டாலும். வாழைப்பழம் பயிர் வளர்ச்சியையும், மாம்பழம்
மக்கட்பேறும், மாதுளை கோபத்தைப் போக்கி
சாந்தத்தையும், கொளஞ்சி சோகத்தை நீக்கி
இன்பத்தையும், நாரத்தம்பழம் ஒழுக்கத்தையும் நல்கும். எலுமிச்சை யம பயத்தை நீக்கும்.
சர்க்கரை பகையை அகற்று. இளநீர்
போகங்களைத் தரும். அன்னத்தினால் அபிஷேகம்
செய்வது அரச வாழ்வு தரும்.
சந்தனம் கலந்த நீர் இலட்சுமி
கடாட்சம் நல்கும். நைவேத்யம் நிலப் பிரபுத்வத்தைத் தரும்.
தாம்பூலம் சுகத்தையும் சங்காபிஷேகம் புண்ணிய வாழ்வையும் அளிக்கும்.
பஞ்சாமிருதம்
இரு வகைப்படும். ரசபஞ்சாமிருதம் - ஏலக்காய் முதலிய வாசனைப் பொருள்களுடன்
பால், தயிர், நெய், சர்க்கரை,
தேன் சேர்த்துச் செய்யப்படுவது. பழபஞ்சாமிருதம் - மேற்கூறிய பொருள்களுடன் வாழை, பலா, மா
முதலிய பழங்களையும் கூட்டிச் செய்யப்பெறுவது.
Tuesday, 26 February 2013
Thirupampuram Raghu Ketu Arch
Ketu at the bottom of the Arch |
Raghu at the Arch bottom |
Parigarapoojai contact Dr. Ganapathi Krishnan Mobile. No. 9940397191
Raghu ketu Arch opening ceremony |
Raghu ketu opening ceremony |
Arch at the karkathi -thirupampuram juncture
Tmt. Ramathilagam Nataraja Sundaram in discussion with the guests |
Discussion for the homum function
Subscribe to:
Posts (Atom)